தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாட உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது .இதில் டோனி இடம்பெறவில்லை.
உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பல யூகங்கள் கிளம்பின ஆனால் தோனியும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது இதனை அடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டார். இந்நிலையில் இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இதில் டி20, ஒரு நாள் போட்டி டெஸ்ட் தொடரில் விளையாட சென்றது.
டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது இந்தியா .இதனை தொடர்ந்து டெஸ்ட் தொடரானது நடந்துவருகிறது முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றுள்ளது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் ஷர்மா , மனிஷ் பாண்டே,ஷிகர் தவான், ராகுல் ஆகியோர்க்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதே போல ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா, வஷிங்க்டன் சுந்தர்,ஜடேஜா, குருணால் பாண்டியா, தீபக் சாகர், நவதிப் சைனி, ராகுல் சஹர், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…