#U19WC2024: அரையிறுதி போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்..!
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் அணியான இந்திய அணி தென்னாப்பிரிக்கையை தோற்கடித்து மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்திய அணி ஐந்து முறை வென்றுள்ளது. கடந்த முறை தென்னாப்பிரிக்கவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி உலக கோப்பை கைப்பற்றியது.
இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணி வலுவாக உள்ளது. இந்திய அணி அரையிறுதி வரை தோல்வி அடையாமல் வெற்றி சந்தித்து வருகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி 5 போட்டியில் விளையாடி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 3ல் 200க்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
#INDvsENG : பழிக்கு பழி … இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் முதலில் தான் பேட்டிங் செய்துள்ளது. 5 போட்டிகளில், 4 போட்டிகளில் டாஸ் இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துள்ளது. இந்திய அணி சூப்பர் சிக்ஸின் கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய அரையிறுதியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய வைத்தால் பெரிய ஸ்கோரை இந்திய அணி எடுக்க முடியும் என கூறப்படுகிறது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 1 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கில் திணறி வருகிறது. அந்த அணியில் எந்த ஒரு வீரரும் இந்த தொடரில் சதம் அடிக்க முடியவில்லை. இந்தியா அணியில் முஷீர் கான் மட்டும் இரண்டு முறை சதம் அடித்துள்ளார்.
இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். நாளை மறுநாள் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 2-வது அரை இறுதி போட்டி நடைபெற உள்ளது. வருகின்ற 11 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.