அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் டி-20 அட்டவணை வெளியிடு.!

IND vs IREtour

இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் டி-20 போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுடன் விளையாடும் போட்டிகள் ஜூலை 12இல் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது.

இதையடுத்து ஆகஸ்ட் 18 இல் அயர்லாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் தொடங்குகிறது. ஆகஸ்ட் 18இல் முதல் டி-20 போட்டியும், ஆகஸ்ட் 20இல் 2-வது டி-20 போட்டியும், ஆகஸ்ட் 23 இல் 3-வது டி-20 போட்டியும் நடைபெறுகிறது. 3 டி-20 போட்டிகளும் பிற்பகல் 3 மணிக்கு மலாஹிட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி கடந்த 2022 இல் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. தற்போது அயர்லாந்துக்கு இரண்டாவது முறை இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்