இந்தியா vs இங்கிலாந்து
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25 முதல் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 25-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், 2024 மார்ச் 7 அன்று முடிவடையவுள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து பிட்ச் ரிப்போர்ட்
ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தின் பிட்சை பொறுத்தவரையில் பேட்டருக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் இது சுழற்பந்து வீச்சாளர்களை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட் எடுக்க உதவியாக இருக்கும்.
வானிலை அறிக்கை
விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதாருக்கு வாய்ப்பு..?
முதல் டெஸ்டின் ஐந்து திட்டமிடப்பட்ட நாட்கள் முழுவதும் வானிலை தெளிவாக இருக்கும். காலையில் வெப்பநிலை சுமார் 26 டிகிரி செல்சியஸாக இருக்கும் அதே வேளையில், பிற்பகலில் 30 டிகிரி செல்சியஸாக உயரும், மழைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து நேருக்கு நேர்
இதற்கு முன்னதாக இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் 35 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 11 போட்டிகளில் இந்திய அணியும், 19 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
இந்தியா
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா , ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்
இங்கிலாந்து
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), பென் ஃபோக்ஸ், ஒல்லி ராபின்சன், ரெஹான் அகமது, ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்
போட்டியை இதில் பார்க்கலாம் ?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டிகளை ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க் சேனலில் பார்க்கலாம். அதைப்போல, ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளம் ஆகியவற்றிலும் பார்க்கலாம்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…