இந்தியா vs இங்கிலாந்து… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!
இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த 25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் இமடப்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இமடப்பெற்றுள்ளனர்.