சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள்.. இங்கிலாந்து தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!
பிப்ரவரி 2021-ல் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள், டி-20 தொடர்களை விளையாண்டு முடித்தது. அதனையடுத்து 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள், 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, அஹமதாபாத் மற்றும் புனே ஆகிய மூன்று மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறும் நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகுளும் அஹமதாபாதில் நடைபெறவுள்ளது. அடுத்த நடைபெறும் டி-20 தொடர் அனைத்தும் அஹமதாபாத்தில் நடைபெறும் எனவும், மூன்று ஒருநாள் போட்டிகள் புனேவில் நடைபெறுகிறது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது!#BCCI | #INDvENG | #Englandtour | #India | #Cricket | @BCCI | @englandcricket pic.twitter.com/FX6VAytHMT
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 10, 2020