இந்தியா vs இங்கிலாந்து; 3 வது நாள் ஆட்டம் – இன்றும் மழைக்கு வாய்ப்பா?..!
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.அதன்படி,நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வந்தபோது 46.1 ஓவரில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால்,போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மழை நின்றதும் 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில்,பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால் 2-ஆம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
It has now started to rain!
We will keep you posted on further updates.#ENGvIND https://t.co/njARIRJHuE
— BCCI (@BCCI) August 5, 2021
இந்திய அணி 46.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளனர்.தற்போது களத்தில் கேஎல் ராகுல் 57*, பண்ட் 7* ரன்கள் எடுத்து உள்ளனர். இங்கிலாந்து அணி 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில்,இன்று இரு அணிகளுக்கிடையேயான 3 வது நாள் ஆட்டம்,இன்று மாலை 3.30 க்கு நடைபெறவுள்ள நிலையில்,நேற்றைப் போலவே, வானிலை இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.