ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இரு அணிகளுக்கிடையான முதல் இருபது ஓவர் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடை பெற இருக்கிறது. மொகாலியில் இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டிக்க்கான பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
டி-20 உலகக்கோப்பை போட்டி தொடங்கவிருக்கும் இந்நிலையில், நடப்பு டி-20 சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் நம்பர் 1 டி-20 அணியான இந்தியா ஆகிய இரு அணிகளும் இன்று இரவு முதல் டி-20 போட்டியில் மோதிக்கொள்கின்றன.
ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலியின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது, மேலும் கேப்டன் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பும் மிகமுக்கியமாகக் கருதப்படுகிறது.
கடந்த சில காலங்களில் சிறப்பாக விளையாடி வரும் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு சற்று அச்சுறுத்தலாக இருக்கும். மேலும் பும்ரா அணிக்கு திரும்புவது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
டிம் டேவிட், இன்று இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பின்ச், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன் ஆகியோர் அந்த அணிக்குப்பலம் சேர்க்கின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…