அரை சதத்தில் அசத்திய தோனி..!படக் அவுட்க்கு இந்திய அணியில் இவர்தான் காரணமாம்.!!!

Default Image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தோனி திடீடென்று அம்பதி ராயுடுவால் ஆட்டமிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா  மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது சிட்னியில் ஜன..,12 தேதி அன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேராதிர்ச்சியாகவும் அமைந்தது. தொடக்க வீரரான தவான் (0) மற்றும் கேப்டன் விராட் கோலி (3), அம்பதி ராயுடு (0) என்று அடுத்தடுத்து மூன்று முக்கிய வீரர்கள்  ஆட்டமிழந்த நிலையில் அணியை சரிவில் இருந்து  மீட்க ரோகித் சர்மா  தோனி  ஜோடி நிதானமாக விளையாடியது.

மேலும் இதில் 5வது வீரராக களமிறங்கினார் தோனி இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் அரங்கில் தன்னுடைய 68வது அரை சதத்தைப் பதிவு செய்துள்ளார்.இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு முழுவதுமே ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தோனி தடுமாறினார் என்று விமர்சனங்கள் அவரது உடற்தகுதி மேல் சந்தேகத்தை கிளப்பினர். கடந்த ஓராண்டாக சொல்லப்பட்டு வந்த இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தல தோனி பேட்டால் பதிலளித்தார்.

இதற்கிடையில் முதல் ஒருநாள் போட்டியில் 96 பந்துகளை சந்தித்த தோனி 51 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ  என்ற முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் இதில் ரிவீவ் இல்லாததால் தோனி எதுவும் செய்ய முடியாமல் பெவிலியன் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தோனியை நோக்கி பாய்ந்த பந்தானது தொலைக்காட்சி ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியில் தரையில் குத்திய பின்னரேதோனியின் பேடில் பட்டது என்று தெரிந்தது.

இந்நிலையில் 4வது ஓவரின்போது மற்றொரு சகவீரரான அம்பதி ராயுடு, தேவையில்லாமல் இந்த ரிவீவ் _ஐ பயன்படுத்தியதான் காரணமாக வீணாக்கிவிட்டார். இந்நிலையில் வேறு வழியின்றி தோனி ஆட்டமிழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை நிலவியது.ஒருவேளை ரிவீவ் வாய்ப்பு தோனிக்கு இருந்திருந்தால் இந்திய அணி தோல்வியை அடைந்திருக்குமா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்