இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20ஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் இந்தியாவுக்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. ஆசிய கோப்பை தொடரை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதால், உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு முக்கிய வீரர்களான கோலி, ரோஹித் சர்மா, பாண்டியா, சிராஜ் உள்ளிட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
அதன்படி, மொஹாலியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
அப்போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறையில்) வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில், இந்திய அணி மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிகளில், சுப்மன் கில், ருத்ராஜ், ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், சமி உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடினர்.
இந்த சமயத்தில் நாளை மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டியின் கடைசி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. ஏற்கனவே, இந்திய அணி 2 போட்டிகளில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என முனைப்பில் உள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்ய வேண்டும் என இந்திய அணி தயாராகி வருகிறது.
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், ராஜ்கோட்டில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஐந்து இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு நாளை போட்டியில் ஓய்வு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்சர் படேலுக்கு காயம் காரணமாக இடம்பெறவில்லை. முதல் இரண்டு ஆட்டங்களில் ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, கடைசி ஆட்டத்திலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய மூவரும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இருப்பினும், ஐசிசி உலகக் கோப்பை 2023க்கு முன்னதாக பணிச்சுமையை நிர்வகிப்பதற்கு, அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகக் கருதலாம்.
5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி ஆட்டத்தில் இந்திய அணியில் 13 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு வருகின்றனர். ஷுப்மான் கில் இல்லாததால், இஷான் கிஷானுடன் ரோஹித் சர்மா ஓபன் செய்வார் எனத் தெரிகிறது.
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…