எங்களின் மும்மூர்த்திகள் படை….கோலியை வீழ்த்த போதும்…ஆஸ்தி.,வீரர் அதிரடி பேச்சு..!!

Published by
kavitha

எங்களின் மும்மூர்த்திகளான ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய வீரர்களால் விராட் கோலியை கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
Image result for கோலி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்  இந்தியா  நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.இந்த தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்நிலையில் சென்ற முறை இந்தியா ஆஸ்திரேலிய தொடரை 0-2 என இழந்தது எனினும் விராட் கோலி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் அவர் 692 ரன்கள் குவித்தார். இதில் சராசரி 86.50 என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் உலகில் விராட் கோலி நம்பமுடியாத ஒரு வீரராக உள்ளார் இந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கொண்ட படை கட்டுப்படுத்தும் என ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் அதிரடியாக தெரிவித்துள்ளார்.இது குறித்து டிராவிஸ் பேசுகையில் எங்களுடைய அணி  பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர் விராட் கோலியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் நான் பந்து வீச்சாளர் ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் , பேட் கம்மின்ஸ்  ஆகிய மூவரும் எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதுவே விராட்க்கு போதுமான  நெருக்கடியை கொடுக்க முடியும். இந்த உலகத்தில் எல்லோருமே மனிதர்கள்தானே மேலும் விராட் சிறந்த வீரர் என்பது எங்களுக்கும் தெரியும். நான் அவரை பெங்களூருவில் தான் முதன்முதலாக பார்த்தேன்.அவர் மிக சிறப்பான வீரர். ஆனால் விராட்டை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சாளர்களை நாங்கள் பெற்றுள்ளோம்.எங்கள் அணியின் மூன்று பேரும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் குழு. மேலும் இந்த போட்டி மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது.இவ்வாறு தெரிவித்த அவர் நாங்கள் இந்தியாவை வீழ்த்தி இந்த போட்டியில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Published by
kavitha

Recent Posts

‘துளிர் விட்ட இலை’… விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…

4 minutes ago

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…

11 minutes ago

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

33 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

1 hour ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

1 hour ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago