இந்தியா – இலங்கை கிரிக்கெட் போட்டியில் நடந்த துரதிஷ்ட நிகழ்வு.! 40,000க்கு வெறும் 6,200 மட்டுமே.?
ஞாயிற்று கிழமை நடைபெற்ற இந்தியா -இலங்கை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற திருவனந்தபுரம் மைதானத்தில் 40 ஆயிரம் டிக்கெட்களில் 6200 டிக்கெட்டுகள் மட்டுமே விற்றன.
ஞாயிற்றுக்கிழமை இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையே7யான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அந்த செய்தியை விட மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது தான் தற்போது வரை தலைப்பு செய்தியாக மாறி வருகிறது.
இதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கேரளா மாநில அரசு கேளிக்கை வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்திவிட்டது. இதன் காரணமாக டிக்கெட் விலையானது 1400 ரூபாயாக உயர்ந்தது. ஆனால் இதுவே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தின் நுழைவு கட்டணம் 600 ரூபாயாக மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கடந்த திருவனந்தபுரம் மைதானத்தில் உள்ள 40,000 இருக்கைகளில் வெறும் 6201 இருக்கைகள் மட்டுமே விற்றன. மற்ற டிக்கெட்டுகள் விற்காமல் இருந்து விட்டன.
பொங்கல் விடுமுறை தினத்தில் போட்டி நடைபெற்றதும், டிக்கெட் விலை உயர்ந்ததும், சபரிமலை யாத்திரை சீசன் நேரத்தில் இந்த போட்டி நடைபெற்றதும் காரணங்களாக கூறப்பட்டாலும், முக்கியமான காரணமாக கேரளா அமைச்சர் கூறிய கருத்துகளும் கூறப்படுகிறது.
கேளிக்கை வரி உயர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பட்டினியால் வாடுபவர்கள் போட்டியை காண மைதானத்திற்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் வி.அப்துரஹிமான் கருத்து கூறியிருந்தார். இதுவும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறுகையில், அமைச்சர் கூறிய கருத்துக்கு மக்கள் அமைச்சரை புறக்கணித்திருக்க வேண்டும் அதை விடுத்து கிரிக்கட்டை புறக்கணிந்திருக்கக் கூடாது. ஏனென்றால் வருங்காலத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் திருவனந்த பதில் நடப்பதில் இந்த இருக்கை பிரச்சனை மிகப்பெரிய விஷயமாக பேசப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.