#WTC:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்ற இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸ்:
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணியில் அக்சர் படேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.பின்னர் இறங்கிய இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்து 33 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாம் இன்னிங்ஸ்:
பின் தனது 2-வதுதொடங்கிய இங்கிலாந்து அணி 30.4 ஓவரில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால், இந்திய அணிக்கு 49 ரன் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் அக்சர் படேல் 5 ,அஸ்வின் 4, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 7.4 ஓவரில் 49 ரன்கள் எடுத்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
இந்நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இப்போது 71 சதவீத புள்ளிகளைக் பெற்று முதலிடத்திற்கு சென்றுள்ளது. இருப்பினும், WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்ளுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
India top the table ????
They now need to win or draw the last Test to book a place in the #WTC21 final ????#INDvENG pic.twitter.com/FQcBTw6dj6
— ICC (@ICC) February 25, 2021