தொடர்ந்து 4 தோல்விகள்.. நெருக்கடியில் கேப்டன் “கிங்” கோலி!
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இதுவரை தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் 2 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இதன்காரணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் விராட் கோலி, கடும் நெருக்கடியில் உள்ளார். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி, தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ரஹானே தலைமையிலான இந்திய அணி, அதிரடியாக ஆடி, டெஸ்ட் தொடரை ட்ரா செய்தது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் கோலி தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதில் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் அடிலெய்டு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதன்பின், நான்காம் முறையாக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதனால் அடுத்த 13 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் எனவும், இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி, 2 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.