நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி-18இலும், டி-20 போட்டிகள் ஜனவரி-27 இலும் தொடங்குகிறது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளின் இந்திய அணி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.பாரத், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர் ஆகியோர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சேர்க்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு டி-20 அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி-20 அணிக்கு ஹர்டிக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் விவரம்,
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (C), சுப்மான் கில், இஷான் கிஷன் (WK), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (WK), ஹர்திக் பாண்டியா (VC), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.
இந்திய டி-20 அணி: ஹர்திக் பாண்டியா (C), சூர்யகுமார் யாதவ் (VC), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி விளையாடும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ரவீந்திர ஜடேஜா உடற்தகுதியை பொறுத்து விளையாடுவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (C), கே.எல். ராகுல் (VC), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (WK), இஷான் கிஷான் (WK), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா. , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…