இந்தியா-இலங்கை மோதும் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், இன்று மும்பையில் தொடங்குகிறது.
இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. இந்தியாவில் நடைபெற்ற இருதரப்பு டி-20 ஆட்டங்களில், இந்தியா 15-4 என்ற கணக்கில் இலங்கை அணியை வென்று முன்னிலை வகிக்கிறது.
மேலும் இலங்கை அணி, ஒருமுறை கூட இந்தியாவில் டி20 இருதரப்பு தொடரை வென்றதில்லை. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, சில மாதங்களுக்கு முன்பு ஆசிய கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் டி-20யைப் பொறுத்தவரை ஆட்டம் எப்போதும் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு,
இந்திய அணி: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(W), ஹர்திக் பாண்டியா(C), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ராகுல் திரிபாதி, முகேஷ் குமார், ஷுப்மன் கில் , சிவம் மாவி
இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஸ் தீக்ஷனா, டில்ஷான் மதுஷங்கா, லஹிரு குமாரா, அவிஷ்க பெர்னாண்டோ, அஷேன் மந்து பண்டாரா, அஷேன் மந்து பண்டாரா, வெல்லலகே, நுவன் துஷாரா, கசுன் ராஜிதா, சதீர சமரவிக்ரமா
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…