இலங்கை கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வருகின்ற 13- ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 17- ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாத காரணத்தால் இலங்கை தொடரில் அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செயல்படவுள்ளனர்.
இதில் ஒரு நாள் போட்டி வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 18- ஆம் தேதியும், டி 20 போட்டி ஜூன் 21 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இலங்கை அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்குதொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து இலங்கை அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் வருகின்ற 13- ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 17- ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 17 , 19, 21, ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டியும், 24, 25, 27, ஆகிய தேதிகளில் டி 20 போட்டியும் நடைபெறுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…