இந்தியா -இலங்கை அணிகள் இன்று மோதல்;கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி – எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியுடன் முன்னதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை3 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதனிடையே,இன்று 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அணிகள்:
சாத்தியமான இந்தியா லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி,கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி,முகமது சிராஜ்.
சாத்தியமான இலங்கை லெவன்: திமுத் கருணாரத்ன (கேப்டன்),லஹிரு திரிமான்னா,பதும் நிஸ்ஸங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ்,தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா,நிரோஷன் டிக்வெல்லா (வி.கீப்பர்),லஹிரு குமாரா, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரமா.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025