இந்தியா கொரோனா வைரஸை அடித்து வெளியேற்ற வேண்டும் – பும்ரா
இந்தியாவே ஓர் அணியாகி கொரோனா வைரஸை அடித்து வெளியேற்ற வேண்டும் என கிரிக்கெட் வீரர் பும்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா நோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதை இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து தீபம், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பூம்ரா பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவு கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,
வீட்டில் உள்ள விளக்குகளை இன்று இரவு 9 மணிக்கு அணைத்துவிட்டு டார்ச் விளக்குகளை ஒளிரவிடுவது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பும்ரா, இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது எல்லா ரசிகர்களும் உற்சாகத்தில் ஒன்றாகச் செல்போனில் உள்ள பிளாஷ் லைட்டை அடித்தும்,பலத்த சத்தத்துடன் கைகளைத் தட்டுவீர்கள் மற்றும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள். எனவே இந்த சமயத்தில் இந்தியாவே ஒரு அணியாகச் சேர்ந்து கொரோனா வைரஸ் அடித்து வெளியேற்ற வேண்டும் .இன்று இரவு 9 மணிக்கு உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
That feeling of every fan shining their phone’s flashlight & bursting into applause & cheer when we deliver a knockout performance, is unparalleled! @BCCI
Team India, let’s hit this virus out of the park!
April 5, 9 PM, 9 minutesShow your support!@narendramodi
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) April 4, 2020