அதிரடி காட்டிய ரோகித் சர்மா, ரிங்கு சிங்… 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா ..!

ப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது.  அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,  யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதாவது மூன்றாவது ஓவரின் 3-வது பந்தில் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி அடுத்த பந்திலே வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய  சிவம் துபே கோலி  போல வந்த வேகத்தில் ஒரு ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க அடுத்து வந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் நிலைத்து நிற்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி பவர் பிளே முடிவதற்குள் 22 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது.

இருப்பினும் தொடக்க வீரர் ரோகித் சர்மா , மத்தியில் களம் இறங்கி ரிங்கு சிங் இருவரும் நிதானமாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். இதில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் பூர்த்தி செய்தார். அரைசதம் அடித்த பிறகு அதிரடியாக விளையாடி ரோஹித் 63 பந்தில் 99 ரன்கள் எடுத்தபோது அடுத்த பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.  இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் 5 சதம் அடித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் விளையாடிய ரிங்கு சிங் 36 பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார்.  இருவரும் கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரோஹித் 69 பந்துகளில் 11 பவுண்டரி , 8 சிக்ஸர் உடன் 121* ரன்கள் எடுத்தார்.  ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 பவுண்டரி , 6 சிக்ஸர் உடன் 69* ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 190 ரன்கள் குவிக்கப்பட்டது.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்தனர். ப்கானிஸ்தான் அணியில் ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டையும், அஸ்மத்துல்லா உமர்சாய் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth