இலங்கை அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலே பிருத்வி ஷா விக்கெட்டை இழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.
தவான், சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடிய சற்று ரன்னை உயர்த்தினர். ஹசரங்கா வீசிய பந்தில் 27 ரன்கள் இருக்கும்போது சஞ்சு சாம்சன் எல்பிடபிள்யூ ஆனார். பின் சூர்யகுமார் யாதவ் களமிறக்க சிறப்பாக விளையாடி வந்த தவான் அரைசதம் அடிக்காமல் 46 ரன்னில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்க அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசினார்.
ஆனால், வந்த வேகத்தில் ஹர்திக் பாண்டியா 10 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் இறங்கிய இஷான் கிஷன் 20 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியுள்ளது. இலங்கை அணியில் மினாத் பானுகா 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். 5 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 33 ரன் எடுத்துள்ளது.