#INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி நேற்று தொடங்கி நடைபெற்றது. இப்போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார். 2-வது போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ரஜத் படிதார் 5 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 33 ருண்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது.
களத்தில் தொடக்க வீரர் கேப்டன் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் ஜடேஜா களமிறங்கினார். பின்னர் இருவரும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டுக் கொண்டு வந்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி 131 ரன்கள் குவித்தார். இதன்போது 196 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசினார்.
#INDvENG : சர்பராஸ் கானிடம் மன்னிப்பு கேட்ட ஜடேஜா ..! ஏன் தெரியுமா ..?
ரோகித் சர்மா விக்கெட்டுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக அறிமுகமான சர்பராஸ் கான் அவந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி 48 பந்தில் அரை சதம் கடந்தார். இதைத்தொடர்ந்து 62 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். சர்பராஸ் கான் 66 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். இதைத்தொடர்ந்து முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழந்து 326 ரன்கள் எடுத்தனர்.
களத்தில் ரவீந்திர ஜடேஜா 110*, குல்தீப் யாதவ் 1* ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில், இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் ஜோ ரூட் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 112 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜடேஜா 225 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்தார்.
இதன் பின்னர் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின் கூட்டணியில் 77 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரல் அரைசதம் அடிக்காமல் 46 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசியில் இறங்கிய ஜஸ்பிரித் பும்ரா தனது பங்கிற்கு 26 ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக இந்திய அணி 130.5 ஓவரில் தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வூட் 4 விக்கெட்டையும், ரெஹான் அகமது 2 விக்கெட்டையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட், டாம் ஹார்ட்லி தலா 1 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர்.