#ENGvsIND : முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்த இந்திய அணி..!
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தனர். இதனால், நேற்றைய முதல் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர். களத்தில் கே.எல் ராகுல் 127*, ரஹானே 1* ரன்களுடன் இருந்த நிலையில், இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கே.எல் ராகுல் 129, ரஹானே 1 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து களம் கண்ட ரிஷப் பண்ட், ஜடேஜா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். சிறப்பாக விளையாடி ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்தபோது ஜோஸ் பட்லரிடம் கேட்சை கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஷமி ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து கிளமிறங்கிய இஷாந்த் ஷர்மா 8, பும்ரா ரன் எடுக்காமலும் விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 40 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ராபின்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டுகளையும், மெயின் அலி ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.
Innings Break!
Jadeja (40) is the last one to depart as #TeamIndia are all out for 364 runs.
Scorecard – https://t.co/KGM2YEualG #ENGvIND pic.twitter.com/hOWcJNlGKu
— BCCI (@BCCI) August 13, 2021