இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா , மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் 6 பவுண்டரி உட்பட 29 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஹனுமா விஹாரி களமிறங்க நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 33 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிங்கிய கோலி, ஹனுமா விஹாரி இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுமையாக விளையாடிய கோலி அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லசித் எம்புல்தெனிய வீசிய பந்தில் 45 ரன் எடுத்து போல்ட் ஆனார்.
சிறப்பாக விளையாடி வந்த ஹனுமா விஹாரி அடுத்த 2 ஓவரில் அரைசதம் விளாசி 58 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் 27 ரன் எடுத்து நடையை கட்டினார். மத்தியில் இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். இதனால், ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி , 4 சிக்ஸர் என 96 ரன் எடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்து களம் கண்ட ரவீந்திர ஜடேஜா , அஸ்வின் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 357 ரன் எடுத்துள்ளனர். களத்தில் ரவீந்திர ஜடேஜா 45*, அஸ்வின் 10* ரன் எடுத்து விளையாடி வருகின்றனர்.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…