மேற்கிந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வேஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் 3 ஒருநாள் , 5டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று 2வது டெஸ்ட் போட்டி டிரினிடட் மைதானத்தில் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் போட்டியிலேயே அசத்திய ஜெய்ஸ்வால் , கடந்த முறை சதம் கண்ட ரோஹித் ஷர்மா ஆகியோர் மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 57, 80 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து களமிறங்கிய கில் மற்றும் ரகானே முறையே 10 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 87, ஜடேஜா 36 ரன்களுடன் இன்னும் களத்தில் நிற்கின்றனர்.
இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் முடிவில், இந்திய கிரிக்கெட் அணி நிதானமாக விளையாடி 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. கடந்த முறை கேப்டன் ரோஹித் ஷர்மா சதம் விளாசியது போல இன்று இரவு இரண்டாம் நாளில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…