#INDvENG: மாஸாக ஆடி 224 ரன்கள் குவித்த இந்தியா.. வெற்றிபெறுமா இங்கிலாந்து??
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி, 224 ரன்கள் அடித்தது. 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி டி-20 போட்டி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் – விராட் களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக அடி வர, ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். 64 ரன்கள் எடுத்து ரோஹித் வெளியேற, பின்னர் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். இருவரும் கூட்டணி போட்டு மீண்டும் அதிரடியாக ஆடினார்கள். 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்து சூரியகுமார் யாதவ் வெளியேற, அவரைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.
இருவரின் கூட்டணியில் மீண்டும் அதிரடியாக ஆட, இந்திய அணி 19 ஓவர் முடிவில் 211 ரன்கள் குவித்து அசத்தியது. இறுதியாக விராட் கோலி, 7 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 22 ரன்கள் அடித்தது. தற்பொழுது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.