#CricketBreaking:பதிலடி கொடுத்த இந்தியா ;அதிரடி காட்டிய விராட் கோலி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 5 போட்டிகளும் நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில், 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி:
இதனிடையே களமிறங்கிய இங்கிலாந்து அணி , ஜோஸ் பட்லர் (0) ரன் எதுவும் எடுக்காமல் வனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழந்தார்.ஜேசன் ராய் (35 பந்துகளில் 46), டேவிட் மாலன் (23 பந்துகளில் 24) 47 பந்துகளில் 63 ரன்கள் பகிர்ந்து இங்கிலாந்தின் ஸ்கோரை முன்னோக்கி கொண்டு சென்றனர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது.165 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி :
தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்,கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்து 17.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கான பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் (2/29), தாக்கூர் (2/29) இரண்டு விக்கெட்களையும் சாஹல் மற்றும் புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.