4 ஓவர்க்கு 80% இந்திய அணியின் ஊதியத்தை பரித்த ஜசிசி.!

- கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பதிவுசெய்து சாதனை படைத்து வரும் இந்திய அணி
- நியூசிலந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அபராதம்.மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக விளையாடி, அத்தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனைப்படைத்தது.தற்போது 3ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் துவங்கியுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் 21ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தாமதமாக பந்து வீசி தொடர்ந்து மூன்று சர்வதேச போட்டிகளில் மிகவும் தாமதமாக பந்து வீசி இந்திய அணி ஹாட்ரிக் அடித்துள்ளது.
இதற்கு முன்னதாக நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகளில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக சொல்லப்பட்டது.அதற்காக 4 போட்டிக்கு 40 % மும் ,5வது போட்டிக்கு 20% என அடுத்தடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.அப்படி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல் தாமதமாக பந்து வீசி உள்ளது.இது தொடர்ந்து அணிக்கு மூன்றாவது முறையாகும்.
இது தொடர்பாக கூறப்படுகையில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் 4 ஓவர்கள் குறைவாக இந்திய அணி வீசியுள்ளது . இதனால் வீரர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.2 பிரிவின் கீழ், இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் தாமதமான பந்து வீச்சை இந்திய கேப்டன் கோலி ஒப்புக்கொண்டார். அதன்படி ஒரு ஓவர்க்கு 20%ம் என, 4 ஓவர்களுக்கு இந்திய வீர்களின் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 80% அபராதமாக விதிக்கப்பட்டது.சாதனையில் ஹாட்ரிக் படைப்பது மட்டுமல்லாமல் அபராதம் கட்டுவதிலும் இந்திய அணி ஹாட்ரிக் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025