இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டி..! 6 மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் விலை..!

INDvsPAK

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக அகமதாபாத்திற்கு விமான டிக்கெட் விலை 6 மடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள 2023ம் ஆண்டிற்கான 50 ஓவர் கொண்ட ஐசிசி உலக கோப்பை  கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், அக்.15ம் தேதி அகமதாபாத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அகமதாபாத்திற்கு செல்லும் விமான டிக்கெட் விலை உயர்ந்து வருகின்றன. குறிப்பாக, டெல்லி-அகமதாபாத் மற்றும் மும்பை-அகமதாபாத் இடையேயான கட்டணங்கள் ஏற்றம் கண்டுள்ளது.

இதுகுறித்து கூறிய ஈஸ்மைட்ரிப்பின் (EaseMyTrip) தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, உலக கோப்பை போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து, ஹோட்டல் கட்டணங்கள் 5 மடங்கு அதிகரித்து உள்ளன. சொகுசு விடுதிகள் ஒரு இரவுக்கு ரூ.50,000 வரை அதிக கட்டணம் வசூலிக்கின்றன .

தற்பொழுது, விமான டிக்கெட்டுகளுக்கான விலையும் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் டெல்லி-அகமதாபாத் இடையே எகானமி கிளாஸ் டிக்கெட்டின் விலை சுமார் ரூ.3000 ஆகும். ஆனால் அதே டிக்கெட்டின் விலை போட்டிக்கு ஒரு நாளைக்கு முன்னதாக ரூ.22,000 ஆக அதிகரிக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பே மக்கள் முன்பதிவு செய்தாலும், விமானக் கட்டணம் வழக்கத்தை விட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. இருந்தும் போட்டியைக் காண ஆர்வமாக உள்ள பெரும்பாலானோர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்