இந்தியா -பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி !!அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்!!ரவி சாஸ்திரி
- ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- உலகக்கோப்பைப் போட்டிகளில் நாம் பங்கேற்க வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் அரசின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் மீது கடுமையான கோபத்துடனும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவோம்.அதேபோல் இறுதி முடிவை அவர்கள் தான் எடுப்பார்கள்.
அதேபோல் உலகக்கோப்பைப் போட்டிகளில் நாம் பங்கேற்க வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் அரசின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.