லெஜெண்ட் கிரிக்கெட் : இன்று நடைபெறவிருக்கும் லெஜெண்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்படும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தான் லெஜெண்ட் கிரிக்கெட். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து என 6 லெஜெண்ட் கிரிக்கெட் அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினார்கள். இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்ற அணிகளுடன் விளையாட வேண்டும்.
இறுதியில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணி, அடுத்த சுற்றான அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். கடந்த ஜூலை-3 ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா என 4 அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், நேற்று 2 அரை இறுதி போட்டிகள் நடைபெற்றது. அதில் முதல் அரை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.
அதன்பின் இரண்டாம் அரை இறுதி போட்டியில் இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் மோதியது. இந்த 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல 2-ஆம் அரை இறுதி போட்டியில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி, ஆஸ்திரேலிய லெஜெண்ட்ஸ் அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தற்போது, இன்று நடைபெற இருக்கும் இந்த லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் டி20 தொடரின் இறுதி போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா லெஜெண்ட்ஸ் அணியும், யோனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஏற்கனவே இந்த தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், இன்று நடைபெறும் இந்த இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றி கணிப்பு அதிகரித்துள்ளது. இதனை இந்தியா லெஜெண்ட்ஸ் அணியினர் துவம்சம் செய்து கோப்பையை வெல்வர்களா என்பதை பார்க்கலாம்.
எதிர்ப்பார்க்கப்படும் 1 1 வீரர்கள் :
இந்தியா லெஜெண்ட்ஸ் அணி :
ராபின் உத்தப்பா (விக்கெட் கீப்பர்), அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் (கேப்டன்), யூசுப் பதான், இர்பான் பதான், குர்கீரத் சிங் மான், பவன் நேகி, வினய் குமார், ஹர்பஜன் சிங், தவால் குல்கர்னி, ராகுல் சுக்லா, ஆர்.பி. நமன் ஓஜா, சவுரப் திவாரி, அனுரீத் சிங், ராகுல் சர்மா.
பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் அணி :
கம்ரான் அக்மல் (விக்கெட் கீப்பர்), ஷர்ஜீல் கான், சொஹைப் மக்சூத், ஷோயிப் மாலிக், யூனிஸ் கான் (கேப்டன்), ஷாஹித் அப்ரிடி, மிஸ்பா-உல்-ஹக், அமீர் யாமின், சொஹைல் தன்வீர், வஹாப் ரியாஸ், சொஹைல் கான், அப்துல் ரசாக், தௌஃபீக் உமர், முகமது ஹபீஸ், யாசிர் அராபத், சயீத் அஜ்மல், உமர் அக்மல், தன்வீர் அகமது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…