நாளை நடைபெறவிருக்கும் இந்தியா-பாக். போட்டி! மழை பெய்ய வாய்ப்பு.?

India-Pak match

டி20I : இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, மழையால் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் இப்போட்டிக்காக, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், டாஸ் அல்லது போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது. அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்தியாவில் இரவு 8:30மணிக்கு ) மழை பெய்ய 51 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக, தனியார் வானிலை நிறுவனமான (Accuweather) கணித்துள்ளது.

ஒரு வேளை போட்டி மழையால் நடத்த முடியாமல் போனால், அந்த போட்டியை ஐசிசி கைவிட்டு விடும். இதனால் 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளை வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மறுமுனையில் கிரிக்கெட் ரசிகர்கள் உலகின் மிகபெரிய எதிர்ப்பார்ப்பு அடங்கிய போட்டியானது நடைபெற வேண்டும் என மிகுந்த எதிர்ப்பரப்பில் இருந்து வருகின்றனர்.

அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான அணி நாளை பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குகிறது. அதே போல, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியம் தனது முந்தைய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் அமெரிக்காவுக்கு எதிராக ஏமாற்றமளிக்கும் தோல்வியுடன் இந்திய அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்