இந்தியா – நியுஸிலாந்து: ஒருநாள் தொடர் நாளை துவக்கம்! இதுவரை புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை நடைபெற உள்ளது இந்திய நேரப்படி நாளை காலை ஏழு முப்பது மணிக்கு இந்த போட்டிகள் துவங்கும் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நியூசிலாந்தில் நடக்கும் தொடர்கள் இந்தியாவில் ஒளிபரப்பப்படும்
இந்திய அணி கடைசியாக கடந்த 2014-15-இல் நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. இதில் 4-0 என ஒரு நாள் தொடரை இழந்தது இந்தியா. இரு அணிகளும் இதுவரை 98 ஒரு நாள் ஆட்டங்கள் ஆடியுள்ளன. இதில் இந்தியா 49-இலும், நியூஸி. 43-இலும் வென்றன. 1 டையில் முடிந்தது. 5 ஆட்டங்கள் எந்த முடிவும் தெரியவில்லை. இரு அணிகளும் கடந்த 1976 முதல் ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி வருகின்றன. 12 ஒரு நாள் தொடர்களில் இந்தியா 6 முறையும், நியூஸி. 4 முறையும் கைப்பற்றியுள்ளன.
நியூஸிலாந்துக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, முகமது ஷமி, விஜய் ஷங்கர், ஷுப்மன் கில்.
நியூஸிலாந்து அணி விவரம்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ட்ரெண்ட் போல்ட், டக் ப்ரேஸ்வல், காலின் டி கிராண்ட்ஹோம், லாகி ஃபெர்கூஸன், மார்டின் கப்டில், மேட் ஹென்ரி, டாம் லாதன் (விக்கெட் கீப்பர்), காலின் முன்ரோ, ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி, ராஸ் டெய்லர்.