இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடும் டி-20 தொடர் இன்று தொடக்கம்.!

Default Image

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று  வெல்லிங்டனில் தொடங்குகிறது.

டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்து சில நாட்களில் இந்தியா, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இதில் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுடன் இந்தியா களம் காணுகிறது.

மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஹர்டிக் பாண்டியா இந்திய அணிக்கு தலைமை வகிக்கிறார். இதனால் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இந்திய அணி கேப்டன் ஹர்டிக் பாண்டியா இது குறித்து பேசும்போது, இந்தியா டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கெதிரான 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, இது வருத்தமான விஷயம்தான், உலகக்கோப்பையில் நாங்கள் நினைத்த மாதிரி நடக்கவில்லை, எனினும் அடுத்த இலக்கை நோக்கி நகர வேண்டும் என்றும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

வெற்றி எப்படியோ, தோல்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நியூசிலாந்து தொடரில் இந்திய அணி நிறைய இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது, அவர்கள் விளையாடுவதைப் பார்க்க நானும் ஆவலோடு இருக்கிறேன் என்று பாண்டியா கூறினார்.

கேன் வில்லியம்சன் டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக நியூசிலாந்தை வழி நடத்துகிறார். இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் க்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் ஃபின் ஆலன் முதன்முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரில் களமிறங்குகிறார்.

முதல் டி-20 போட்டி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. 2 ஆவது மற்றும் 3 ஆவது டி-20 போட்டி முறையே நவ-20,22 தேதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டி தொடர் ஆக்லாந்தில் நவ-25 இல் தொடங்குகிறது. இரு அணிகள் விவரம்,

இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (C), ரிஷப் பந்த் (VC & WK), இஷான் கிஷன், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார். , உம்ரான் மாலிக்

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (C), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (WK), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்