இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்தில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 67 , ராஸ் டெய்லர் 67 ரன்கள் அடித்ததன் மூலம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
லீக் போட்டிகளில் மழை குறுக்கிட்டு போட்டிகள் ரத்தான இரு அணிகளுக்கு சமமான புள்ளிகள் கொடுக்கப்படும்.ஆனால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் மழை குறுக்கிட்டு போட்டிகள் ரத்தான ரிசர்வ் நாள்களில் நடத்தப்படும்.
ரிசர்வ் நாள்களில் போட்டிகள் நடத்தமுடியாமல் போனாலும் , மழை குறுக்கிட்டாலும் லீக் மற்றும் காலிறுதி போட்டிகளில் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளதோ அந்த அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும்.
இந்நிலையில் நாளையும் மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால் புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.மேலும் ரசிகர்கள் இன்றைய டிக்கெட்டை வைத்து கொண்டு நாளையும் போட்டியை காணலாம் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…