மிரட்டிய மழை நாளை மீண்டும் இந்தியா -நியூஸிலாந்து போட்டி !

Default Image

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்தில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர்.

பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 67 , ராஸ் டெய்லர் 67 ரன்கள் அடித்ததன் மூலம் நியூஸிலாந்து அணி  46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி கொண்டு இருந்த  போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

லீக் போட்டிகளில் மழை குறுக்கிட்டு போட்டிகள் ரத்தான இரு அணிகளுக்கு சமமான புள்ளிகள் கொடுக்கப்படும்.ஆனால் இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில்  மழை குறுக்கிட்டு போட்டிகள் ரத்தான ரிசர்வ் நாள்களில் நடத்தப்படும்.

ரிசர்வ் நாள்களில் போட்டிகள் நடத்தமுடியாமல் போனாலும் , மழை குறுக்கிட்டாலும்   லீக் மற்றும் காலிறுதி போட்டிகளில் இந்த இரண்டு அணிகளில் எந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளதோ அந்த அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும்.

இந்நிலையில் நாளையும் மழை குறுக்கிட்டு போட்டி ரத்தானால்  புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.மேலும் ரசிகர்கள் இன்றைய டிக்கெட்டை வைத்து கொண்டு நாளையும் போட்டியை காணலாம் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்