இன்றிரவு இந்தியா- நியூசிலாந்து மோதல்..!
இன்று இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்றிரவு நடைபெறுகிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட நியூசிலாந்து நேரடியாக இந்தியா வந்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியியின் பதவி காலம் முடிந்த நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரில் ஐபிஎல்லில் சிறப்பாக விலையாடிய வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.