இந்தியா தன் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்
ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து, இந்தியாவின் பேட்டிங் யுக்திகளில் மாற்றம் தேவை என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆசியக்கோப்பைத் தொடரில் இருந்து இந்தியா, தான் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்திருக்கிறது. டி-20 உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 16இல் தொடங்க உள்ள நிலையில், இந்தியா இவ்வாறு தனது யுக்திகளில் முடிவெடுப்பது குறித்து சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் போட்டியில், பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக அக்சார் பட்டேலை அனுப்பியது சரியான முறையா? என்று சுனில் கவாஸ்கர், கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ரிஷப் பந்த் திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை நீங்கள் அணியில், பேட்டிங்கை வலுப்படுத்த எடுத்துள்ளீர்கள் என்றால் தினேஷ் கார்த்திக்கை முன் வரிசையில் களமிறக்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமரிசித்துள்ளார்.