பாக்சிங் டே டெஸ்ட் : இந்திய அணி படுதோல்வி! கைநழுவிய இறுதிப்போட்டி வாய்ப்பு?
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தன. 3வது போட்டி சமன் செய்யப்பட்டது.
4வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக டிசம்பர் 26இல் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிக்கிஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா நிலைத்து ஆடி 234 ரன்கள் குவித்தது.
அதனை தொடர்ந்து, 339 ரன்கள் முன்னிலை வகித்துள்ள ஆஸ்திரேலியா அணியை இன்று கடைசி நாள் (5ஆம் நாள்) ஆட்டத்தில் 340 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கம் முதலே சரிவை சந்தித்தன. தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 84 ரன்களும், ரிஷப் பன்ட் 30 ரன்களும் எடுத்தனர். மற்றபடி அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தனர்.
ரோஹித் சர்மா 9 ரன்களும், கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும், விராட் கோலி 5 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஜடேஜா 2, நிதிஷ்குமார் ரெட்டி 1, வாஷிங்டன் சுந்தர் 5, ஆகாஷ் தீப் 7, பும்ரா 0 என அடுத்தடுத்து அவுட் ஆகி 79.1 ஓவரில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது இந்திய அணி. இதன் மூலம் 4வது டெஸ்ட் போட்டியை 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.
இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னேறியுள்ளது. அடுத்த போட்டி இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் கவாஸ்கர் தொடர் சமனில் முடிவடையும். அந்த போட்டியில் தோற்றாலோ, அல்லது டிரா செய்தாலோ பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவும்.
இறுதி போட்டிக்குள் இந்தியா?
அதே போல டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பையும் இழக்கும் சூழலில் இந்திய அணி உள்ளது. இந்த தொடரில் வென்றால் மட்டுமே இறுதி போட்டிக்கு தடையின்றி செல்லும் நிலை இருந்தது. தற்போதைய சூழலில், 3வது இடத்தில் உள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அந்த டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்று வென்றுவிட்டால், இலங்கை அணி 2ஆம் இடத்திற்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா உடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.