உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் குறைந்த ரன்னில் ஒன்பது விக்கெட் இழந்த இந்திய அணி!
உலக்கோப்பை தொடர் கோலாகலமாக நடந்து வருகிறது.உலக கோப்பையில் மிக மோசமான குறைந்த ரன்னில் 9 விக்கெட் இழந்த அணிகளில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நாக்பூரில் சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் மோதிய போட்டியில் 142-வது ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது.
பிறகு 267 ரன்னில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது.பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 296 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் பறி கொடுத்தது.இதன் மூலம் 29 ரன்னில் 9 விக்கெட்டை இந்திய அணி இழந்தது.
அதன் பிறகு நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை அணி மோதியது. இப்போட்டியில் 141 வது ரன்னில் இரண்டாவது விக்கெட்டை இழந்து விளையாடிய இலங்கை அணி பின்னர் 201 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
Worst nine-wicket collapses after 140+ for one down in WCs:
29/9 Ind vs SA Nagpur 2011 (267/1-296)
47/9 Can vs WI Centurion 2003 (155/1-202)
60/9 SL vs Afg Cardiff 2019 (141/1-201)