டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சதங்கள் இந்திய அணியின் வெற்றியை பறித்தது என பிசிசிஐ தலைவர் கருத்து.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மோசமான தோல்வியை சந்தித்தது. அதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க நாளிலிருந்தே ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை செலுத்தியதால், இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.
முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் இரட்டை சதங்கள், இது இந்தியாவை மிகவும் காயப்படுத்தியது. இந்தியா அணியில் பேட்டிங் சொதப்பல், கேப்டன்சி சரியில்லை மற்றும் அணி தேர்வு சரியில்லை என அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் பலவிதமான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் நாளிலேயே WTC இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது என்று பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது பற்றிப் பேசிய பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, நாங்கள் முதல் நாளிலேயே ஆட்டத்தை இழந்தோம், இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா போட்ட பெரிய பார்ட்னர்ஷிப்தான் இந்த ஆட்டத்தில் போக்கையே மாற்றியது.
குறிப்பாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் பார்ட்னர்ஷிப் என்பது இந்திய அணியை பின்னுக்கு தள்ளியது. இந்த இருவரின் விக்கெட்டை எடுத்திருந்தால், ஆட்டம் சமமாக இருந்திருக்கும். ஹெட் மற்றும் ஸ்மித்தின் அற்புதமான ஆட்டத்தைத் தவிர, அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டது இந்தியாவுக்கும் மேலும் தலைவலியாக அமைந்தது. கேரியுடன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர், இது இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கை விதிக்க உதவியது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ள ODI உலகக் கோப்பையில் இந்திய அணி நம்பிக்கையுடன் இருக்கவும், கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் எங்களிடம் பெரிய மாற்றம் ஒன்று வர உள்ளது, எனவே, நாங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் மற்றும் உலகக் கோப்பையில் நாங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும், அதுவும் உள்ளூரில் நடக்கவுள்ளது, இதனால் அதுதான் முக்கியம் என மேலும் கூறினார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…