இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதையடுத்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 4, உமேஷ் யாதவ் 3, பும்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.
பிருத்வி ஷா ஆட்டம் தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா களமிறங்கினார். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்த நிலையில், மூன்றாவது நாளான இன்று இந்திய அணி இன்றை ஆட்டத்தில் தொடங்கியது.
ஆஸ்திரேலிய வீரர்களின் வேகத்தை தாக்குபிடிக்கமுடியாமல் இந்திய அணி வீரர்கள் 36 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தனர். புஜாரா, ரஹானே ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி தற்போது 9 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்து 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…