ஒருநாள் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவிக்கும் கேப்டன் கே.எல்.ராகுல்.! ரோஹித் தலைமையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி.!

KL Rahul and Rohit Sharma

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது.  அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இதில் முதல் 2 போட்டிகளில் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் கே.எல்.ராகுல் இந்திய கிரிகெட் அணியை தலைமை ஏற்று களம்கண்டார். இதில் கே.எல்.ராகுல் தலைமை ஏற்ற 2 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றிகண்டது.

அதுவும், பேட் கம்மின்ஸ் தலைமையில், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் கிரீன், மிச்சல் மார்ஷ் என பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் என இளம் படையினை வைத்து கே.எல்.ராகுல் வெற்றிவாகை சூடினார். 2 போட்டிகள் வென்றதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

தொடரை கைப்பற்றிய பின்னர், நேற்று 3வது ஒருநாள் போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில், விராட் கோலி,  கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, பும்ரா , சிராஜ் ஆகியோர் அடங்கிய அணியுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது

இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து இருந்தனர். இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா 81 ரன்களும், விராட் கோலி 56 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 48 ரன்களும் எடுத்து இருந்தனர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும், தொடரை வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்கு முதல் 2 போட்டிகள் வென்று கொடுத்த கே.எல்.ராகுலை வாங்குமாறு கேப்டன் ரோஹித் சர்மா அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக கே.எல்.ராகுல் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே செயல்பட்டாலும் அதில் நல்ல ரெகார்ட் வைத்துள்ளார் என்பதே உண்மை. இதுவரை 9 போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது.

அதில் முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகளில் தொடர் தோல்விக்கு பிறகு, ஜிம்பாவேவுடன் 3 போட்டிகள், வங்கதேசத்துடன் ஒரு வெற்றி, ஆஸ்திரேலியாவுடன் 2 வெற்றி என 6 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார் கேப்டன் கே.எல்.ராகுல்.

அதே போல, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு டி20 போட்டி மட்டும் விளையாடி அதிலும் வெற்றி கண்டுள்ளார். அதே போல வந்ததேசனுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று 3இல் 2 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளார் கேப்டன் கே.எல்.ராகுல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்