INDvsENG : இந்தியா அதிரடி! இரண்டாம் நாள் முடிவில் 175 ரன்கள் முன்னிலை!

INDvsENG

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் (நாள் 1) 

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் 37, டக்கெட் 35, ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், ரவீந்திர ஜடேஜா 3, அஷ்வின் 3, அக்சர் படேல் , பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள்.

இந்தியா முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். பிறகு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை குவித்து இருந்தது.

இப்படியா ரன் அடிப்பீர்கள்… சுப்மான் கில்லை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

இரண்டாம் நாள் ஆட்டம் 

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். அவருடன் களத்தில் சுப்மன் கில் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் சுப்மன் கில் அவுட் ஆனார். அதைப்போல ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும்  ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நின்று கொண்டு நிதானமாக விளையாடினார்கள். அதிலும் குறிப்பாக கே.எல்.ராகுல்  80 ரன்கள் எடுத்த பிறகு தான் ஆட்டத்தை இழந்து வெளியேறினார். ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.

இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு

அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 80 ரன்களை குவித்து களத்தில் இருக்கிறார். அவருடன் அக்சர் படேலும் 35 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இந்நிலையில், இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 110 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 421  ரன்கள் எடுத்துள்ளது. இதன்முலம் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா மீண்டும் பேட்டிங்கை தொடங்கும்.

இரண்டாம் நாள் முடிவின் அடிப்படையில், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோ ரூட், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜாக் லீச்.ரெஹான் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்