இன்று 4-ஆம் நாள் ஆட்டம்; 146 ரன்கள் முன்னிலையில் இந்தியா..!
இந்தியா 146 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் இன்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது . டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னின்னிஸில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று முந்தினம் 2-ஆம் நாள் ஆட்டத்தின் போது பெய்த தொடர் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் அன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது.
இதைதொடர்ந்து, நேற்று மூன்றாம் நாள் ஆட்டம்தொடங்கி நடைபெற்ற நிலையில், அடுத்தது விக்கெட்டை இழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123, மயங்க் அகர்வால் 60 மற்றும் ரஹானே 48 ரன்கள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கிடி 6, ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆட்டம் ஆரம்பத்திலிருந்து விக்கெட்டை இழக்க தொடங்கியது. இதனால், தென்னாபிரிக்கா 32 ரன் எடுத்தபோது 4 விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர், மத்தியில் களம் கண்ட பாவுமா 52, குயின்டன் டி காக் 34 ரன்கள் எடுக்க இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் முகமது ஷமி 5, பும்ரா, ஷர்துல் தாக்கூர் தலா 2 வீழ்த்தினர். நேற்றைய மீதம் இருந்த நேரத்தில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸை 130 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, இந்திய அணி தொடக்க வீரர்களான கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மயங்க் அகர்வால் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இந்நிலையில், நேற்றைய 3-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 16 ரன் எடுத்துள்ளது. இதனால், இந்தியா 146 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்று 4-ஆம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது. தற்போது களத்தில் ஷர்துல் தாக்கூர் 4*, கே.எல் ராகுல் 5* ரன்களுடன் உள்ளனர்.