இந்தியா -நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இத்தொடரின் கடைசி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறும் பட்சத்தில் நியூஸிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும். அதே நேரத்தில் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் விளையாடவுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் போன்றோர் காத்திப்பு வீரர்கள் பட்டியலில் உள்ளதால் உலகத்தரம் வாய்ந்த எதிரணிக்கு எதிராக இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்தியா வாய்ப்பு அளிக்கலாம் என கூறப்படுகிறது. இரு அணிகளுக்கிடையில் டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…