சென்னை : டி20 உலகக்கோப்பைக்கான வாரம் அப் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருவது தான் டி20 உலகக்கோப்பை. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த தொடரானது இந்த முறை அமெரிக்கா மற்றும் அண்டைய நாடான வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றும் வருகிறது.
இந்நிலையில், ஐசிசி தொடருக்கு முன் எப்போதுமே ஒரு வார்ம் அப் போட்டிகளை நடத்துவார்கள். இந்த டி20 தொடருக்கான வார்ம் அப் போட்டியை ஐசிசி நடத்த போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஐசிசி தற்போது வார்ம் அப் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஐசிசி அறிவித்துள்ள அந்த இந்த வார்ம் அப்போட்டிகளானது வருகிற மே 27 முதல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதில் நேபால், கனடா, நமீபியா, உகாண்டா , வங்காளதேசம், அமெரிக்கா , ஓமன் , பப்புவா நியூ கினி, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளுக்கு தலா 2 வார்ம் அப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதே போல தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு ஒரே ஒரு வார்ம் அப் போட்டிகள் மட்டுமே நடைபெற உள்ளது.
அதிலும் வருகிற ஜூன் 1-ம் தேதி இந்தியாவும், வங்காளதேசமும் வாரம் அப் போட்டிகளில் விளையாட உள்ளனர். ஆனால் இந்த போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும் என்பதை இது வரை அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வேதச டி20 போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக டி20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு இந்த வார்ம் அப் போட்டி ஒரு பயிற்சியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த டி20 உலகக்கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகளில் விளையாடவில்லை. அதற்க்கு காரணம் என்னவென்றால் இந்த இரு அணிகளும் அவர்களுக்கு இடையே மே 22 முதல் மே 30 வரை நடைபெறவுள்ள 4 டி20 போட்டிகள் தொடரில் விளையாடவுள்ளார். இதனால் இதுவே ஒரு வார்ம் அப் போட்டியாகவும், இந்த உலகக்கோப்பைக்கான ஒரு பயிற்சியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…