நேற்றைய போட்டியில் இந்திய அணியும் , இலங்கை அணியும் மோதியது. இப்போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இலங்கை 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இருவருமே சதம் விளாசினார்.இப்போட்டியில் ரோஹித் சர்மா 103 ,கே .எல் ராகுல் 111 ரன்களும் குவித்தனர்.
இதன் மூலம் உலகக்கோப்பையில் இந்திய அணியில் முதன் முறையாக தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்து சாதனை படைத்து உள்ளனர்.
ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டாவது முறையாக தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்து உள்ளனர்.
மேலும் உலகக்கோப்பையில் தொடக்க வீரர்கள் இருவருமே சதம் அடித்தது இதுவே மூன்றாவது முறையாகும்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…