IndvsWI Day-2:விராட் கோலியின் 121 இந்தியா 428 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸ் நிறைவு
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இதனால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அணி மாற்றத்துடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் போட்டியிலேயே அசத்திய ஜெய்ஸ்வால்(57) , கடந்த முறை சதம் கண்ட ரோஹித் ஷர்மா(80) ரன்களுக்கு அட்டமிழந்தனர்.
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட விராட் கோலி அதனை பூர்த்திசெய்யும் விதமாக 180 பந்துகளில், ஷானன் கேப்ரியல் பந்தில் ஒரு பவுண்டரியுடன் தனது 29வது டெஸ்ட் சதத்தை எட்டினார்.விராட் கோலி டிசம்பர் 2018 க்குப் பிறகு தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார்.
அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா 61 மற்றும் அஸ்வின் 56 ரன்கள் எடுத்து அணியின் ரன்னை வேகமாக உயர்த்தினர் .இதனால் இந்திய அணி 438 ரன்களுக்குவலுவான நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது .இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.