மேக்ஸ்வெல்லின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா….!!

Published by
Dinasuvadu desk
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயாக போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 190  ரன்கள் அடித்தது.
  • ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார்.தவான் கடுமையாக போராடி 24 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் ஆறு பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் இந்திய அணி 20 ஒவர்களின் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 190  ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி  72*  ரன்கள் அடித்தார்.தோனி 40 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார் .  இதன் பின்னர் 191 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி ரன் குவித்தது. மேலும் அந்த அணியின் தொடக்க வீரர் ஷார்ட் 28 பந்துகளில் 40 ரன் குவித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தார். ஆஸ்திரேலிய அணி 19.04 ஓவர்களில்  3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

39 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago